கால்பந்து வரலாற்றில் சர்வதேச மைல்கல்லைப் பதித்த டி.எப். சூடீன்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

90 ஆண்டுகளுக்கும் மேலான பெருமைமிக்க வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து விளையாட்டுத் துறையில், இதுவரை எட்டப்படாத ஒரு சர்வதேச மைல்கல்லை நிலைநாட்டி, நுவரெலியா கால்பந்து சங்கத்தின் கீழ் உருவான முதலாவது சர்வதேச கால்பந்து நடுவராக டி.எப். சூடீன் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்று வரும் 17 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய கால்பந்து போட்டித் தொடரில் நடுவராகப் பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளதன் மூலம், நுவரெலியாவின் விளையாட்டுப் பாரம்பரியத்திற்கு அவர் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்துள்ளார்.

2026 நவம்பர் 05 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை நடைபெறும் இப்போட்டித் தொடரின் நடுவர் பணிகளில் டி.எப். சூடீன் பங்கேற்றுள்ளார்.

90 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட நுவரெலியா கால்பந்து சங்கத்தின் ஊடாக உருவான ஒருவர் சர்வதேச கால்பந்து போட்டித் தொடரொன்றில் நடுவராகப் பணியாற்றுவது இதுவே முதல் தடவையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய மலைநாட்டின் அழகிய மலைத்தொடர்களால் சூழப்பட்டு, இலங்கையின் தனித்துவமான குளிரான காலநிலையைக் கொண்ட நுவரெலியா, சுற்றுலாத்துறைக்கு மட்டுமன்றி நீண்டகால விளையாட்டுப் பாரம்பரியத்திற்கும் பெயர்பெற்ற நகரமாகும். குறிப்பாக கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுத் துறைகளில் திறமையான வீரர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் விளையாட்டு நிர்வாகிகளை உருவாக்கிய பெருமை இந்நகருக்கு உண்டு.

இத்தகைய விளையாட்டுப் பாரம்பரியத்தைக் கொண்ட நுவரெலியாவிலிருந்து உருவான ஒருவர் ஆசிய மட்டத்திலான சர்வதேச கால்பந்து போட்டித் தொடரில் நடுவராகப் பணியாற்றுவது, இப்பிரதேசத்தின் விளையாட்டுத் திறமைகள் சர்வதேச அரங்கிலும் தடம் பதிக்க முடியும் என்பதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

Share this Article
Leave a comment