சஷி வீரவன்சவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை உறுதி!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு முறைகேடாகப் பெறப்பட்ட இராஜதந்திரக் கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை இலங்கை உயர் நீதிமன்றம் இன்று (18/11) உறுதிப்படுத்தியுள்ளது.

தனக்கு எதிராக விதிக்கப்பட்ட தண்டனையை இரத்துச் செய்யக் கோரி அவர் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், அதனை நிராகரித்து தீர்ப்பளித்துள்ளது.

பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்களைக் கொண்ட அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.

குறித்த வழக்கில், 2022 மே 27ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் சஷி வீரவன்சவை குற்றவாளியாகக் கண்டறிந்து இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடும் 2026 ஜூன் 11ஆம் திகதி நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், உயர் நீதிமன்றத்திலும் அவர் தாக்கல் செய்த மேன்முறையீடு இன்று நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

மேலும், சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக அவரை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this Article
Leave a comment