சுகாதார அமைச்சின் நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சுகாதார சேவையின் மனிதவள ஆற்றலை மேலும் வலுப்படுத்தி, வைத்தியசாலைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களின் நிர்வாக, செயற்பாட்டு மற்றும் உதவிச் சேவைகளை வினைத்திறனுடனும் முறையாகவும் முன்னெடுக்கும் நோக்கில், நான்கு சேவைப் பிரிவுகளின் கீழ் 223 பேருக்கு புதிய நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நியமனங்கள் நேற்று  (14/11) முற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில் வழங்கப்பட்டன.

இதன்போது

அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்கு 36 பேர்.

களஞ்சியக் காப்பாளர் பதவிக்கு 27 பேர்.

சிறு சேவை மேற்பார்வையாளர் பதவிக்கு 6 பேர்.

சுகாதாரப் பணியாளர் உதவியாளர் பதவிக்கு 154 பேர்.

என மொத்தம் 223 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி குணவர்தன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, அமைச்சின் மேலதிக செயலாளர்களான

கே.பி. யோகச்சந்திர மற்றும் ஹர்ஷனி சிறிநாம, பிரதி பணிப்பாளர் நாயகங்களான வசந்த குமாரசிங்க மற்றும் தினிப்ரிய ஹேரத், சிரேஷ்ட உதவிச் செயலாளர் நிமேஷா நானாயக்கார உள்ளிட்ட பல அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment