ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரு வேறு பகுதிகளில் இருவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாட்டின் இரு வெவ்வேறு பகுதிகளில் நேற்று சனிக்கிழமை (14/11) முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்புகளின் போது, ‘ஐஸ்’ மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாரஹேன்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹத்போதியவத்தை பகுதியில் மேல் மாகாண தெற்குப் பிராந்திய குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் குழுவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், 105 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் நாரஹேன்பிட்டி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடையவர் ஆவார்.

இதேவேளை, அம்பலாங்கொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கந்தேகொட ரயில் நிலையத்திற்கு அருகில் அம்பலாங்கொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பில், 101 கிராம் 303 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அம்பலாங்கொட பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் ஆவார்.

மேலும், இந்த சம்பவங்கள் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

Share this Article
Leave a comment