தேசிய லொத்தர் சபை (NLB), 2026ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் லொத்தர் விற்பனை ஊடாக 5,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.
இதே வளர்ச்சி தொடரும் பட்சத்தில், 2026ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் லொத்தர் விற்பனை மூலம் கிடைக்கும் மொத்த வருமானம் 6,000 கோடி ரூபாயைத் தாண்டும் என சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையில், நிறுவனத்தின் வருமான அதிகரிப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஊழியர்கள் வழங்கிய பங்களிப்பைப் பாராட்டும் வகையில், 2025ஆம் ஆண்டுக்கான இரண்டு மாதச் சம்பளத்திற்கு இணையான ஊக்குவிப்புக் கொடுப்பனவை ஊழியர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும், தேசிய வர்த்தக சிறப்பு விருது வழங்கும் விழாவில் 2024 மற்றும் 2025 ஆகிய இரு ஆண்டுகளிலும் தேசிய லொத்தர் சபை இரண்டாம் இடத்தைப் பெற்றுச் சாதனை படைத்துள்ளது.
நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்குத் தொடர்ந்து பங்களிக்கும் நோக்கில், தேசிய லொத்தர் சபையின் செயற்பாடுகளுக்கு பொதுமக்கள் தொடர்ந்தும் ஆதரவு வழங்க வேண்டும் என சபை கேட்டுக்கொண்டுள்ளது.