வடக்கு கிழக்கில் உள்ள மீனவர்களின் பிரச்சினைக்கு அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்க வில்லை- அடைக்கலநாதன் எம்.பி

SUB EDITOR
SUB EDITOR
3 Min Read

கடற்றொழில் அமைச்சின் ஊடாக நடத்தப்பட்ட அபிவிருத்தி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்   படுவதில்லை என்றும் குறிப்பாக மன்னார்  மாவட்டத்திலும் கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை (09/11) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,

இலங்கையில் வாழ்கின்ற எங்களுடைய மீனவ சமூகம் இந்த இயற்கை அனர்த்தங்கள் வருகின்ற போதெல்லாம் அவர்களுக்கு உடனடியாக கடலுக்கு செல்ல வேண்டாம் என்று சொல்லுகின்ற ஒரு நிலையை அறிவித்தல் ஊடாக செய்கிறார்கள்.

ஆனால் அவர்களுக்கு கிட்டத்தட்ட ஒரு மாதத்துக்கு மேல இந்த அனர்த்தங்கள் தொடருமாக இருந்தால் அல்லது பத்து நாளுக்கு மேல் தொடருமாக இருந்தால் அவர்களுடைய வாழ்வாதாரம் மிகவும் மோசமாக பாதிக்கப்படுகிறது.

குழந்தைகளின் கல்வி, சாப்பாடு, குடும்பங்களை சாப்பாட்டின் நிலைமைகள் இன்னும் கடன் பட்ட கடன்களை அடைப்பதற்கு நிலைமைகள் எல்லாம் பாதிக்கப்படுகின்ற ஒரு சூழலில் மீனவ சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது.மன உளைச்சலால் அவர்கள் துன்பப்பட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்த அரசு ஏனைய அரசுகளும் எங்களுடைய மீனவர்களை சந்திப்பதில் அவர்களுடைய நலன்களை கவனித்துக் கொள்வதில் எந்த அக்கறையும் கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை  முன்வைக்கின்றேன்.

இந்த அரசும் வருகின்ற வரவு செலவு திட்டத்தில் இந்த அனர்த்தத்தால் அனர்த்தம் அறிவிக்கப்பட்ட உடனே மீனவ சமூகத்திற்கு நிவாரணம் ஏதோ ஒரு வழியிலே வழங்கப்பட வேண்டும் என்று முதல் கோரிக்கையை  முன் வைக்கிறேன்.

அடுத்ததாக இந்த சுருக்குவலை பிரச்சனை மன்னாரில் மிகவும் மோசமான ஒரு சூழலை எங்களுடைய மீனவர்கள் சந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

எங்களைப் பொறுத்தமட்டில் தடை செய்யப்பட்ட எந்த தொழிலாக இருந்தாலும் அது நிறுத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.ஆனால் சுருக்கு வலை  1 1/2 இஞ்சி   அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட மன்னாரில் குடும்பங்கள் 38,000 குடும்பங்களின் எண்ணிக்கை இருக்கிறது.

மன்னார் மாவட்டத்தில் 80 மீனவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  அதை மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.மன்னாரை பொறுத்தமட்டில் ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் தான் தொழில் செய்ய வேண்டும்.ஆகவே இப்பொழுது இந்திய றோலர்களின் வருகை மோசமாக இருக்கிறது.

ஆனால் தடை செய்யப்பட்ட எந்த ஒரு தொழிலும் தடை செய்வதற்கான எந்த நடவடிக்கைகளையும் செய்யவில்லை.கடற்படை   சில விஷயங்களை நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆனால் முழுமையாக டைனமைட்  நிறுத்தப்படவில்லை.

ஆனால் எங்களுடைய மீனவர்களுக்கு ஒரு கால அவகாசம் கொடுக்க வேண்டும் இந்த சுருக்குவலை சம்பந்தமாக. அல்லது அனுமதி கொடுக்க வேண்டும். இந்த 80 பேருக்கு கொடுத்தது போல 1 1/2 இன்ச் வலைகளை கையாளுகின்ற வகையில் ஒட்டுமொத்தமாக மன்னார் மாவட்டத்தில் அனுமதி வழங்க வேண்டும்.

என்னை பொறுத்தமட்டில் நான் வைக்கிற கோரிக்கை என்னவென்றால் இந்த தடைகள்  செய்யப்பட வேண்டும். ஆனால் அதற்கு கால அவகாசம் கொடுத்து மீனவர்கள் தங்களுடைய அடுத்த தொழிலை செய்வதற்கான கால அவகாசம் கொடுக்க வேண்டும்.

 ஆனால் இங்கே அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கிற முடிவுகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற ஒரு நிலை தொடர்ந்து காணப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறுகின்ற அபிவிருத்தி கூட்டத்தின் முடிவுகள் எந்த வகையிலும் நடை முறைப்படுத்தப்படாத ஒரு நிலைதான் தொங்கு நிலைதான் காணப்படுகிறது.

உதாரணத்துக்கு இந்த நிலம் சம்பந்தமான விடயங்கள் காலகாலமாக எங்கள் மக்கள் எதிர்பார்ப்போடு இருக்கிற விடயங்கள் ஏமாற்றப் படுகின்ற நிலையைத்தான் காணப்படுகிறது.அமைச்சர் சந்திரசேகரிடம் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.நீங்கள் உடனடியாக அவர்களுக்கு கால அவகாசத்தை கொடுத்து அவர்களுடைய தொழிலை மாற்றுவதற்கான வாய்ப்பை உண்டு பண்ண வேண்டும்.

இப்பொழுது சுருக்கு வலை  தொழிலை முன்னெடுக்க இரண்டு மூன்று மாதங்கள் தான் இருக்கிறது.]ஆனால் 80 பேருக்குத் தான் அனுமதி வழங்கப்படுகிறது. அது எந்த விதத்தில் நியாயமாக இருக்கிறது? ஒவ்வொரு மீனவர்களுடைய வயிற்றில் அடிக்கின்ற ஒரு செயல்பாடாக தான் இருக்கிறது என அவர் தெரிவித்தார்.

 

Share this Article
Leave a comment