புங்குடுதீவு வைத்தியசாலையில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 100 யூரோ சேமிப்பு: புதிய திட்டம் ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைகளுக்கும் 100 யூரோ பணத்தை சிறுவர் சேமிப்பு கணக்கில் வைப்பிலிடும் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பிரதேசத்தில் வாழ்ந்து வரும் பொதுமக்களின் நலன்களை கருத்திற்கொண்டும், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் துரித அபிவிருத்தியை நோக்கமாக கொண்டும் புங்குடுதீவு உலகமைய தன்னார்வ தொண்டு நிறுவனமும், நோயாளர் நலன்புரி சங்கமும் இணைந்து இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளன. புங்குடுதீவை சேர்ந்த கே.நாகரட்ணத்தின் முதலாவது ஆண்டு நினைவாகஜெர்மனியில் வசிக்கும்அவரது புதல்வர் நாகரட்ணம் நந்தகுமார் இத்திட்டத்தை தொடக்கி வைத்துள்ளார்.

இதன்போது புங்குடுதீவு வைத்தியசாலையில் ஏற்கனவே பிறந்த இரு குழந்தைகளுக்கு தலா 100 யூரோ நிதியுதவி வழங்கப்பட்டது. எதிர்வரும் காலங்களிலும் குறித்த வைத்தியசாலையில் பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தைக்கும் 100 யூரோ நிதியுதவியை புங்குடுதீவு உலக மையம் ஊடாக வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் புங்குடுதீவு வைத்தியசாலையின் மகப்பேற்று விடுதியின் பாவனைக்காக வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கம் ஊடாக புங்குடுதீவு வ.பொ. கனகரத்தினம் அறக்கட்டளையினர் ஒரு கோடி ரூபா பெறுமதியான ஸ்கேனர் இயந்திரம் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஆக்கபூர்வமான உதவித் திட்டங்கள் மூலம் கிராமங்களில் உள்ள வைத்தியசாலைகளை மீளக்கட்டியெழுப்ப முடியும் என பொது அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.


Share this Article
Leave a comment