சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இபகிடிவதையுடன் தொடர்புடைய 11 மாணவர்களை நிரந்தரமாக நீக்கம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சபரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கடுமையான பகிடிவதை காரணமாக 23 வயதான மாணவர் சரித் திலீஷான் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அதில் தொடர்புடைய 11 மாணவர்களை பல்கலைக்கழகத்திலிருந்து நிரந்தரமாக நீக்க நிர்வாக சபை தீர்மானித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி, பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தின் இரண்டாம் ஆண்டில் கல்வி பயின்ற சரித் திலீஷான் தனது வீட்டில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார்.

பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான பகிடிவதை, உடல் மற்றும் உள ரீதியான சித்திரவதைகளைத் தாங்க முடியாமலேயே தனது மகன் இந்த முடிவை எடுத்ததாக அவரது பெற்றோர் குற்றம் சுமத்தியிருந்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் 14 மாணவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பான விரிவான ஒழுக்காற்று விசாரணை அறிக்கை கடந்த வாரம் வெளியானது. பகிடிவதை மற்றும் கடுமையான ஒழுக்காற்று விதிமீறல்களில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதையடுத்து, 11 மாணவர்களின் பல்கலைக்கழகப் பதிவு நிரந்தரமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், துணைவேந்தரின் எழுத்துமூல அனுமதியின்றி பல்கலைக்கழக வளாகம், விடுதிகள் உட்பட எந்தவொரு பகுதிக்குள்ளும் இவர்கள் நுழைவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment