இலங்கையில் தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்காக 50 இலட்சம் முன் அச்சிடப்பட்ட பொலிகார்பனேட் அட்டைகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தம் ஜெர்மனியின் M/s Muhlbauer ID Services GmbH நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
4.93 மில்லியன் யூரோ பெறுமதியான இந்த ஒப்பந்தத்தின் கீழ், குறித்த அட்டைகள் ஆட்பதிவுத் திணைக்களத்திற்கு வழங்கப்படவுள்ளன.
சர்வதேச போட்டி விலைமனு முறையில் கிடைத்த எட்டு விண்ணப்பங்களில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டின் பின்னர் ஜெர்மன் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.