12 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது 12 கிலோகிராமுக்கும் அதிகமான ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் 38 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் செப்டம்பர் 2ஆம் திகதி மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது, சந்தேகநபரிடமிருந்து 4.17 கிலோகிராம் ஹெரோயினும் 8.055 கிலோகிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 3 இலட்சம் ரூபா பணத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் வெல்லம்பிட்டி, சேதவத்த பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரால் சந்தேகநபருக்கு இப்போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பிராந்திய குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article