மறைந்த ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு வடமராட்சியில் நினைவேந்தல்..!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

மறைந்த முன்னாள்  யாழ் ஊடக அமையத்தின் முன்னாள் தலைவர் ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல் துஷ்யந்தன் தலைமையில் மைக்கல்  நேசக்கரம் அலுவலகத்தில் நேற்று (16/08) காலை இடம்பெற்றது.

இதில் ஆறுமுகம்  சபேஷ்வரன்   அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து  நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும்,  யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தொடக்குனருமான திரு தயாபரன்,  முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன் பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி.,  சி.த.காண்டீபன்.  உட்பட  ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.

இந்  நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள்,  ஊடகவியலாளர்கள்,  மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,  பிரதேச மக்கள், சமூக  ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

மறைந்த  ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனுக்கு   நினைவேந்தல்..!

மறைந்த முன்னாள்  தினக்குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியர்  ஆறுமுகம் சபேஸ்வரன் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு மைக்கல் நேசக்கரம்,  மற்றும் மைக்கல் விளையாட்டு கழகத்தின்  ஏற்பாட்டில் சுயாதீன ஊடகவியலாளர் வெற்றிவேல் துஷ்யந்தன் தலைமையில் மைக்கல்  நேசக்கரம் அலுவலகத்தில் நேற்று (16/08) காலை இடம்பெற்றது.

இதில் ஆறுமுகம்  சபேஷ்வரன்   அவர்களது திரு உருவப் படத்திற்கு அக வணக்கம் செலுத்தப்பட்டு ஈகை சுடர்கள் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து  நினைவுரைகளை மூத்த ஊடகவியலாளரும்,  யாழ்ப்பாணம் ஊடக மையத்தின் தொடக்குனருமான திரு தயாபரன்,  முன்னாள் தினக்குரல் உதவி ஆசிரியர் பிருந்தாபன் பொன்ராசா ஊடகவியலாளர்களான அ.சசி.,  சி.த.காண்டீபன்.  உட்பட  ஊடகவியலாளர் ஆறுமுகம் சபேஸ்வரனின் நண்பர்கள் நிகழ்த்தினர்.

இந்  நிகழ்வில் ஊடகவியலாளர் சபேஷ்வரனின் நண்பர்கள்,  ஊடகவியலாளர்கள்,  மைக்கல் நேசக்கரம் மற்றும் விளையாட்டு கழகத்தின் நிர்வாகிகள் உறுப்பினர்கள்,  பிரதேச மக்கள், சமூக  ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டு சபேஷ்வரனுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Share this Article
Leave a comment