தனுஷ்கோடியில் கைதான இருவருக்கும் வத்தளை துப்பாக்கிச் சூட்டுடன் தொடர்பு…!!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

சட்டவிரோதமாகப் படகில் தனுஷ்கோடி சென்ற இரு இலங்கையர்களும் அண்மையில் வத்தளையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோதமான முறையில் படகொன்றின் மூலம் தனுஷ்கோடிக்குச் சென்ற இரு இலங்கையர்களை இந்தியக் கடலோரப் பொலிஸார் நேற்று (24/07) கைது செய்துள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 30 மற்றும் 31 ஆகிய வயதுடைய வத்தளை மற்றும் கம்பஹா பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வியாழக்கிழமை வத்தளைப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் இவர்களுக்குத் தொடர்பிருக்கலாம் என இலங்கை அதிகாரிகள் சந்தேகம் வெளியிடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும், இவர்கள் இருவருக்கும் எதிராக இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு இலங்கை அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், சந்தேகநபர்கள் தற்போது திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒரு வாரத்திற்குள் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment