பிரித்தானிய வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பிரித்தானியாவின் வெளிநாட்டு அமைச்சகத்தில் இணை அமைச்சராக பதவி வகித்து வந்த இலங்கைத் தமிழரான உமா குமரன், தற்போது பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களில் பிரித்தானியாவில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ஹன்டி பெர்கம் பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, அவரது புதிய அமைச்சரவையில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, வெளிநாட்டு அமைச்சகத்தின் இராஜாங்க அமைச்சராக உமா குமரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை, இந்தியா மற்றும் தெற்கு ஆசிய நாடுகள் தொடர்பான பொறுப்புகள் அவரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிரித்தானிய நாடாளுமன்றத்திற்கு தெரிவான முதல் தமிழ் பெண் உறுப்பினர் என்ற பெருமையையும் உமா குமரன் பெற்றுள்ளார்.

இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் இனப்படுகொலை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற பின்னர், தொடர்ந்து வலுவாக குரல் எழுப்பி வந்ததாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், கடந்த 14ஆம் திகதி, உள்துறை அமைச்சர் யூஹெட் கூப்பருடன் செம்மணி விவகாரம் மற்றும் இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமை தொடர்பாகவும் அவர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Share this Article
Leave a comment