இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகராலயம் இடமாற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான கனடிய உயர்ஸ்தானிகராலயம்,  கொழும்பு 3, ஐந்தாவது குறுக்குத் தெருவில் அமைந்திருந்த தனது தூதரக காரியாலயத்தை கொழும்பு 7 இல் புதுப்பிக்கப்பட்டுள்ள புதிய வளாகத்திற்கு உத்தியோகபூர்வமாக இடமாற்றம் செய்துள்ளது.

இலங்கை மற்றும் மாலைத்தீவு அரசாங்கங்களுடனும், பொதுமக்களுடனும் தனது இருதரப்பு உறவுகளையும் ஈடுபாட்டையும் மேலும் வலுப்படுத்துவதற்கான கனடாவின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த இடமாற்றம் பிரதிபலிக்கிறது என உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

நேற்று  (24/06) புதன்கிழமை முதல் தூதரகத்தின் அனைத்து சேவைகளும் புதிய முகவரியிலேயே இயங்கும். எனவே, பொதுமக்கள், விசா விண்ணப்பதாரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்களது சந்திப்புகள் மற்றும் கடிதத் தொடர்புகள் அனைத்தையும் இனிவரும் நாட்களில் பின்வரும் புதிய முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:

புதிய முகவரி:

இலக்கம் 6,

ஸ்ரீமத் ஆர். ஜி. சேனநாயக்க மாவத்தை,

கொழும்பு 07,

No. 6,

Srimath R. G. Senanayake Mawatha,

Colombo 07,

Sri Lanka

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் திட்டங்கள், தொடர்புகள் மற்றும் ஏனைய தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, அவர்களது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment