வேலணை பிரதேச சபை உறுப்பினர்கள் சமாதான நீதவான்களாக சத்தியப்பிரமாணம்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வேலணை பிரதேச சபையின் உறுப்பினர்கள் பதவிநிலை சமாதான நீதவான்களாக கடந்த செவ்வாய்க்கிழமை (23.06) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

ஊர்காவற்றுறை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஊர்காவற்றுறை நீதவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் சத்தியப்பிரமாண நடவடிக்கைகள் இடம்பெற்றன.

22 உறுப்பினர்களைக் கொண்ட வேலணை பிரதேச சபையின் மக்கள் பிரதிநிதிகள் இதில் கலந்துகொண்டு, தங்களது பதவிகளுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டு தொடர்புடைய ஆவணங்களில் கையொப்பமிட்டனர்.

இந்த நியமனத்தின் மூலம் பொதுமக்களுக்கான சான்றுப்படுத்தல் சேவைகள், அவசர தேவைகளுக்கான உதவிகள் மற்றும் பிரதேச மக்களின் நலன்சார்ந்த பணிகளை சட்டபூர்வ அதிகாரத்துடன் மேலும் திறம்பட முன்னெடுக்க முடியும் என சத்தியப்பிரமாணம் செய்த உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

Share this Article
Leave a comment