அஸ்வெசும ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில் வைப்பு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை நாளை (18/06) வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, 13 இலட்சத்து 73 ஆயிரத்து 248 பயனாளிக் குடும்பங்களுக்காக மொத்தமாக 10.9 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தக் கொடுப்பனவு ‘அஸ்வெசும’ முதற்கட்ட பயனாளிகளுக்கே வழங்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து, பயனாளிகள் நாளை முதல் தங்களது வங்கி கணக்குகள் ஊடாக குறித்த கொடுப்பனவுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment