சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம் இந்துக் கல்லூரியாக தரமுயர்வு

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் சங்கானையில் அமைந்துள்ள சங்கானை சிவப்பிரகாச மகா வித்தியாலயம், சங்கானை சிவப்பிரகாச இந்துக் கல்லூரி என தரமுயர்த்தப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 4 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இத்தரமுயர்வு வழங்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், மாகாண கல்விப் பணிப்பாளர், வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் பாடசாலை அதிபருக்கு அறிவித்துள்ளார்.

பாடசாலையால் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்கள், கல்வி மற்றும் நிர்வாக ரீதியான சிபாரிசுகள், அதனுடன் தொடர்புடைய கோரிக்கைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன் மூலம் சங்கானைப் பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியில் புதிய அத்தியாயம் உருவாகியுள்ளதுடன், மாணவர்கள் மற்றும் பழைய மாணவர்களிடையேயும் மகிழ்ச்சி நிலவுகிறது. புதிய தரமுயர்வின் மூலம் கல்வி, விளையாட்டு மற்றும் இணைப்பாட நடவடிக்கைகளில் மேலும் முன்னேற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Article
Leave a comment