சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் !!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஜூன் மாதத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை திருத்தம் நாளை (04/06) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதுடன்,புதிய விலை நாளை மறுதினம் (05/06) முதல் அமுல்படுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

மாதாந்திர விலை திருத்தம் தொடர்பான அறிக்கைகள் ஏற்கனவே நிதி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும்,அதுகுறித்த இறுதி மதிப்பீடு இன்று (03/06) புதன்கிழமை கிடைக்கப் பெறும் என லிட்ரோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சந்தையின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் உலகளாவிய எரிவாயு விலை போக்குகளின் அடிப்படையில் புதிய விலைத்திருத்தம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூன் மாதத்திற்கான விலை திருத்தத்தை நிர்ணயிக்கும் போது, உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப உள்நாட்டு எரிவாயு விலைகளை சீரமைக்க நிறுவனம் உத்தேசித்துள்ளதாக அறிய முடிகிறது.

Share this Article
Leave a comment