மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயார் – தேர்தல் ஆணைக்குழு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்படும் முறைப்படி மாகாண சபைத் தேர்தல்களை நடத்தத் தயாராக இருப்பதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் முன்னிலையில் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் முன்னிலையாகியிருந்த போதே இந்த நிலைப்பாட்டை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்களிப்புடன் இக்கூட்டம் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகளும் இக்குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டு மாகாண சபைத் தேர்தல்களை நடத்துவதில் காணப்படும் சட்ட ரீதியான தடைகளை விவரிக்கும் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்துள்ளதாக கூறப்படுகிறது

Share this Article