“நீரை பாதுகாப்போம் –நயினாதீவின் எதிர்காலத்தை காப்போம்”எனும் வகையில் நயினாதீவு மண்ணின் நன்னீர் வளங்கள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மையமாகக் கொண்டு நயினாதீவில் நன்னீர் கள ஆய்வும் மக்கள் சந்திப்பும் இடம்பெறவுள்ளது.

சூழலியல் நிபுணர் பேராசிரியர் நடராஜா ஸ்ரீஸ்கந்தராஜா அவர்களின் தலைமையில், துறைசார் நிபுணர்களும் யாழ்ப்பாண பல்கலைக்கழக WASPAR நீர்வள மாணவர்கள் இணைந்து விரிவான கள ஆய்வும் மக்கள் சந்திப்பும் எதிர்வரும் மே 29,30,31 ஆகிய தினங்களில் நடத்தவுள்ளனர்.
நயினாதீவின் பாரம்பரிய நீர்வளங்கள், நல்லதண்ணீர் கிணறுகள், குளங்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகளை பாதுகாப்பதற்கான விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கில் இந்த நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வுகள் மற்றும் கலந்துரையாடல்கள் பாடசாலைகள்,
சனசமூக நிலையங்கள், மதஸ்தலங்கள், பொது நிறுவனங்கள், நல்லதண்ணீர் கிணறுகள், குளங்கள் மற்றும் சுற்றாடல் பகுதிகளில் நடைபெறவுள்ளது.
மே 29 ஆம் திகதி – வெள்ளிக்கிழமை
🕤 காலை 9.30 – நாகபூசணி வித்தியாலயம்
🕥 காலை 10.30 – மகாவித்தியாலயம்
🕛 மதியம் 12.00 – கணேச கனிஷ்ட வித்தியாலயம்
🕝 பிற்பகல் 2.30 – பிரதேச சபை
🕒 பிற்பகல் 3.00 – வைத்தியசாலை
🕞 மாலை 3.30 – கணேசா சனசமூக நிலையம் மற்றும் அண்ணா சனசமூக நிலைய சுற்றாடல்
🕟 மாலை 4.30 – இஸ்லாமிய விளையாட்டு கழகப் பிரதேசம்
🕠 மாலை 5.30 – இந்து இளைஞர் மன்ற சுற்றாடல்
(பெருங்குள சூழல் ஆய்வு)
மே 30 ஆம் திகதி – சனிக்கிழமை
🕙 காலை 10.00 – பிடாரி கோவில் சுற்றாடல்
🕐 பிற்பகல் 1.00 – அந்தோணியார் கோவில் சூழல்
🕑 பிற்பகல் 2.00 – கந்தசுவாமி கோவில் பிரதேசம்
(வண்ணாங்குளம் சூழல்)
🕒 மாலை 3.00 – நயினாதீவு நாவலர் சனசமூக நிலைய சூழல்
🕓 மாலை 4.00 – நயினாதீவு வல்லியப்பர் சனசமூக நிலைய சுற்றாடல் பகுதிகள்
மே 31 ஆம் திகதி – ஞாயிற்றுக்கிழமை
🕘 காலை 9.00 – நயினாதீவு மத்திய சனசமூக நிலைய சூழல்
🕙 காலை 10.00 – நயினாதீவு மணிபல்லவ சனசமூக நிலைய சூழல்
(கிராக்குள சூழல் ஆய்வு)
🕚 காலை 11.00 – அம்பிகா சனசமூக நிலையம்
🕜 பிற்பகல் 1.30 மணியளவில்
நியாப் மண்டபத்தில் மக்கள் சந்திப்பு மற்றும் கருத்துப்பகிர்வு நிகழ்வு
எனவே இயற்கையையும் நீர்வளங்களையும் பாதுகாக்கும் இந்த சமூக முயற்சியில் பொதுமக்கள், இளைஞர்கள், சமூக அமைப்புகள் மற்றும் ஆர்வலர்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களின் கருத்துகள், அனுபவங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை வழங்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைத்துள்ளனர்