உலகம் முழுவதும் மே 12ம் திகதி சர்வதேச தாதியர் தினம் உலக சுகாதார நிறுவனத்தினால் விளக்கு ஏந்திய சீமாட்டி என அழைக்கப்படும் புளோரன்ஸ் நைற்றிங்கேல் அம்மையார் பிறந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது.
புளோரன்ஸ் நைற்றிங்கேல் மே 12 1820இல் இங்கிலாந்தைச் சேர்ந்த செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்த வில்லியம் எட்வேட் நைற்றிங்கேல் குடும்பம் இத்தாலியில் கடமையாற்றும் போது மூன்றாவது மகளாகப் பிறந்தார்.
அன்பு செலுத்துங்கள், காலம் குறுகியது. போன்ற வாசகங்களால் ஈர்க்கப்பட்டு மக்களுக்கு உதவி செய்தார். தாதி வேலையை விரும்பி படித்து பட்டம் பெற்றார்.
உலகப் போரின் போது காயப்பட்ட பிரிட்டன் வீரர்களுக்கு மனங்கோணாது விளக்கேற்றி பணியாற்றி பல வீரரைக் காப்பாற்றினார். நேர்சிங் ஹோம் நிறுவி பல தாதியரை உருவாக்கினார். தான் பிறந்த நாடு தவிர்ந்து ஏனைய நாடுகளிலும் விரும்பி கடமையாற்றி பல நோயாளர்களை காப்பாற்றினார்.
தனது தொழிலை தொண்டாக கருதினார். அதனால் பல சிறப்பு விருதுகளையும் பெற்றார். இவர் சிறந்த எழுத்தாளருமாவார்.
இவரை சர்வதேசம் The Lady with Lamp “கை விளக்கு ஏந்திய தேவதை” என அழைத்தது. இவர் 13 ஆகஸ்ட்1920 இறைவனடி சேர்ந்தார்.
அவர் பிறந்த தினமான இன்று மே12 தாதியர் தினம் கொண்டாடப்படுகிறது. தாதியரை செவிலியர் Sister, Midwife என்றும் அழைப்பர்.
தாதியர்களுக்கு வாழ்த்துகள்