யாழ்போதனா மருத்துவமனையில் இன்று (09.05) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தின் போது மீட்புப் பணியில் தமது உயிரையும் பொருட்படுத்தாது, மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட யாழ் மாநகர சபையின் தீயணைப்புப் படையினருக்கு ஆளுநர் நேரில் சென்று தனது விசேட பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்தார். ‘

இதன்போது ‘பெரும் சேதத்தைத் தணிப்பதற்கு நீங்கள் எடுத்த இந்த வீரமிக்க முயற்சிக்கு வார்த்தைகளால் நன்றி கூற முடியாது’ என அவர் தீயணைப்பு வீரர்களிடம் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன், இத்தீயைக் கட்டுப்படுத்தும் கூட்டு முயற்சியில் உடனடியாகச் செயற்பட்டுச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய இராணுவத்தினர், விமானப் படையினர் மற்றும் பொலிஸாருக்கும் ஆளுநர் தனது கௌரவத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
இதேவேளை இக்கட்டான இச்சூழ்நிலையில் அர்ப்பணிப்புடன் இணைந்து செயலாற்றிய மருத்துவமனைப் பணிப்பாளர் உள்ளிட்ட அனைத்து மருத்துவமனை ஊழியர்களுக்கும் ஆளுநர் விசேட நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.