அகில இலங்கை கம்பன் கழகம் நடத்தும் ‘கம்பன் விழா – 2026’ இன் இறுதி நாளில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.

இனவேற்றுமையால் பிளவுண்டு கிடந்த ஒரு தேசத்தை, தனது சொல்லாலும் செயலாலும் ஒன்றுபடுத்தியதற்காக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு கம்பன் கழகம் மகுடம் சூட்டியுள்ளது.
சிறுபான்மைச் சமூகங்களின் நம்பிக்கையைப் பெற்று, “ஒரே நாடு, ஒரே மக்கள்” என்ற பயணத்தில் நாட்டை வழிநடத்தி வரும் அவருக்கு ‘கம்பன் புகழ்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
“கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நேற்று(03/05) ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணிக்கு இடம்பெற்ற நிகழ்விலேயே விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டிலிருந்து வருகை தந்த பாஜக முன்னாள் தலைவர் கு.அண்ணாமலை அவர்கள் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது இந்தியா – இலங்கை இடையிலான ஒரு கலாசார பாலமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது.