பௌத்த பிக்குகளின் வெளிநாட்டு பயணங்களுக்கு கடும் கட்டுப்பாடு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கை அரசாங்கம், வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய மற்றும் கடுமையான நடைமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

வெளிநாடு செல்லும் முன், பிக்குகள் தமது மூத்த பிக்கு ,பிராந்திய பௌத்த தலைவர் ,சம்பந்தப்பட்ட பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் , இவர்களிடமிருந்து பரிந்துரை கடிதங்களை பெற வேண்டும்.

தாய்லாந்திலிருந்து திரும்பிய 22 பிக்குகள் பெருமளவிலான போதைப்பொருட்களுடன் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இந்த தீர்மானத்திற்கு முக்கிய காரணமாகியுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் மகாநாயக்க தேரர்களுக்கு இடையிலான விசேட சந்திப்பின் பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக புத்தசாசன பிரதி அமைச்சர் கமகெதர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

பௌத்த அமைப்பில் ஒழுங்கை உறுதி செய்யும் கடுமையான அரச நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது

Share this Article