அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையே நண்டு தொழிற்சாலையின் முன்பகுதியிலுள்ள தரிசுக் காணிகளில் காணப்பட்ட புதர்களுக்கு விசமிகள் தீ மூட்டியதில் பாரியளவிலான புற்றரைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

குறித்த அனர்த்தம் இன்று (27/04) காலை இடம்பெற்றதுடன் இத் தீயினால் ஏற்பட்ட புகையின் காரணமாக வீதியால் மக்கள் செல்லமுடியாத நிலையும் உருவானது.
ஊர்காவற்றுறை – யாழ்ப்பாணம் வீதியின் பிரதான போக்குவரத்து , வீதியில் இந்த நாசகார வேலையை விசமிகள் மேற்கொண்டதை பொலிசாருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து யாழ். மாநகர சபையின் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டு தீயை கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்கப்பட்டது.
எனவே இவ்வாறான தீமூட்டல் செயல்களை செய்வோர் கண்டறியப்பட்டு தண்டிக்கப்பட வேப்டும் என்று பவலியுறுத்தியுள்ளனர்.