சம்பூர் கடலில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி பலி.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் பகுதியில் அமைந்துள்ள வெளிச்ச வீட்டு கடற்பரப்பில் இன்று (12/04) ஞாயிற்றுக்கிழமை நண்பர்களுடன் நீராடச் சென்ற 19 வயது இளைஞர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இன்று பிற்பகல் சுமார் 3.40 மணியளவில் நண்பர்களுடன் கடலில் நீராடிக் கொண்டிருந்தபோது திடீரென எழுந்த கடல் அலை காரணமாக குறித்த இளைஞர் இழுத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர் அவரது சடலம் மீட்கப்பட்டது.

உயிரிழந்தவர் மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த சௌமி முஹம்மது அப்லல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக சம்பூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this Article
Leave a comment