அரசு அலுவலகங்கள் எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வழமை போன்று திறந்திருக்கும் என இலங்கை பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக இந்தத் திகதிகளில் அரசு ஊழியர்கள் இணையவழியில் பணியாற்றுவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.
இருப்பினும், தற்போது அந்த முடிவு மாற்றப்பட்டு, அலுவலகங்கள் நேரடியாக இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.