நெடுந்தீவில் சிறப்பாக இடம்பெற்ற சர்வதேச மகளிர் தின விழா !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள 19 சுய உதவிக் குழு உறுப்பினர்களை இணைத்து   சர்வதேச மகளிர் தின விழா, யாழ் சமூகச் செயற்பாட்டு மையத்தின்  ஏற்பாட்டில் நேற்றையதினம்(25/03)  இடம்பெற்றது.

யாழ் சமூகச் செயற்பாட்டு நிறுவனத்தின் (JSAC) நெடுந்தீவு பிரிவுக்கான உதவி செயற்திட்ட அலுவலர் திருமதி ஜீ. மெலோஜனா தலைமையில்  தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் நெடுந்தீவு வைத்திய அதிகாரி திருமதி நிரோஷா சஜீசயன் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்தார்

மகளீர்தினத்தை முன்னிட்டு கடந்த 22 ஆம் திகதி  நடாத்தப்பட்ட பாரம்பரிய விளையாட்டுக்களுக்கான  பரிசில்களும் இதன்போது வழங்கப்பட்டதுடன் சுய உதவிக் குழு உறுப்பினர்களின் கலை நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்றது.

சுய உதவிக் குழுப் பெண்களின் தலைமைத்துவத்தை கௌரவிக்கும் வகையில், அவர்களது குடும்பங்களைச் சேர்ந்த ஆண் உறுப்பினர்கள் ஒரு ஏற்பாட்டுக் குழுவாக இணைந்து இவ்விழாவினை முன்னின்று நடாத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

நிகழ்வில்  சமயத் தலைவர்கள், நெடுந்தீவு பிரதேச சபை உப தவிசாளர் , பிரதேசசெயலக முன்பிள்ளை பருவ உத்தியோகத்தர் திருமதி நிஷாந்தினி டானியல், கிராம அலுவலர்கள் மற்றும் பெரும் எண்ணிக்கையிலான மகளீரும் , நலன்விரும்பிகளும் கலந்துகொண்டனர்.

Share this Article
Leave a comment