ஹார்மூஸ் நீரினை ஊடாக கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஈரான் தனது கடல் எல்லைக்குள் ஒரு “பாதுகாப்பான கடல் வழித்தடத்தை” உருவாக்கியுள்ளது.

அமெரிக்கா அல்லது இஸ்ரேலுடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத நாடுகளின் கப்பல்கள் இந்த வழியாகச் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

​ஈரானிய வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்களின்படி, பின்வரும் நாடுகளின் கப்பல்களுக்கு முன்னுரிமை மற்றும் பாதுகாப்பு உறுதி அளிக்கப்பட்டுள்ளது

இந்தியாவின் எரிசக்தி

தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்தியக் கொடியுடன் கூடிய கப்பல்கள் செல்ல ஈரான் அனுமதி அளித்துள்ளது.

ஜப்பானிய கப்பல்கள் செல்வது குறித்தும், அவற்றுக்கான பாதுகாப்பு குறித்தும் ஈரான் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது.

​சீனா , பாகிஸ்தான் ‘ஈரானுடன் நெருங்கிய  உறவைக் கொண்டுள்ளதால், இந்த நாடுகளின் கப்பல்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

​மலேசியா ,ஈராக் இந்த நாடுகளும் ஈரானுடன் இணைந்து கப்பல் போக்குவரத்தை ஒருங்கிணைத்து வருகின்றன.

​இந்த அனுமதி அனைவருக்கும் பொதுவானது அல்ல. கப்பல்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையிடம் (IRGC) கப்பல் குறித்த உரிமையாளர், ஏற்றிச் செல்லும் பொருட்கள், செல்லும் இடம் என்பன முன்கூட்டியே சமர்ப்பித்து அனுமதி பெற வேண்டும்.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய அல்லது அந்த நாடுகளுக்குச் சொந்தமான கப்பல்களுக்கு இந்த வழியில் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment