மகிந்தவுக்கு ஏற்பட்டுள்ள பாரிய சிக்கல் – முன்னரே அறிந்த நாமல் ராஜபக்ச..

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

 ஸ்ரீலங்கன் ஏயார் லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன தனது தந்தையை மாட்டிவிடப் போவதாக நாமல் ராஜபக்ச முன்கூடியே அறிந்திருந்தார் என்ற செய்தி ஒன்று கசிந்துள்ளது.

நாமல் ராஜபக்சவின் ஊடகப் பிரிவு வெளியிட்டிருந்த காணொளி ஒன்றில் அவர் குறித்த விடயம் தொடர்பில் தெளிவுப்படுத்தியுள்ளார்.

அந்த காணொளி பல சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தன.அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது.

கடந்த காலங்களில் சிலரை இலக்கு வைத்து அரசாங்கம் குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறது.அத்தோடு அண்மையில் கைது செய்யப்பட்ட கபில சந்திரசேனவை மீரட்டி பிரபல அரசியல்வாதி ஒருவரின் பெயரை வாக்கு மூலத்தில் எழுதி கொண்டுள்ளனர்.அந்த அரசியல்வாதி யாரென நாங்கள் கேட்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார்.

நேற்று (19.03) கபில சந்திரசேன நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய சந்தர்ப்பத்தில் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு இந்த விடயத்தை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு முன்னர் கபில சந்திரசேன இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவுக்கு வழங்கிய வாக்கு மூலம் எவ்வாறு நாமலுக்கு இரு நாட்களுக்கு முன் கசிந்தது என்பதில் உள்ளக வட்டாரங்களில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன.

அத்தோடு கபில சந்திரசேன தனது முன்னைய வாக்குமூலம் இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மிரட்டல் சூழ்நிலையில் பெறப்பட்டதாகக் கூறும் அறிக்கை ஒன்றும் அவரது வழக்கறிஞர்களால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திசாநாயக்க பக்கச்சார்பின்றி நேர்மையாக நடந்தாலும் அதிலுள்ள அதிகாரிகள் ராஜபக்சக்களுக்கு பக்கச்சார்பாகவே நடப்பதான பாரிய சந்தேகத்தை தோற்றுவித்துள்ளது.

ரணில் விக்ரமசிங்க தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பிரபல ஆங்கில பத்திரிகையில் அது தொர்டபில் செய்திகள் பரப்பப்பட்டன.

மேலும் அமைச்சர் குமார் ஜயகொடி தொடர்பிலான விசாரணையிலும் குறித்த செய்தி உடனே வெளியானது.இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்காமல் பார்த்துக் கொள்வது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

Share this Article