நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் போட்டி 20.03.2026

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த.க வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு- 2026 எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20/03) இடம்பெறவுள்ளது

வித்தியாலய அதிபர் சி.சிவகுமார் தலைமையில் உதயசூரியன் விளையாட்டு மைதானத்தில் வெள்ளிக்கிழமை பி.ப  1.30 மணிக்கு இடம்பெறவுள்ள நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் அவர்களும்  சிறப்பு விருந்தினர்களாக சர்வதேச கப்பல் கப்டன் டோமினிக் ரெறன்ஸ் அவர்களும் பல.நோ.கூ.சங்க தலைவர் எ.அருந்தவசீலன் அவர்களும் கலந்து சிறப்பிப்பதுடன் கௌரவ விருந்தினர்களாக பிரதேச சபை உறுப்பினர் கஸ்பார் செல்வம் பேனாட் அவர்களும், சமூக செயற்பாட்டாளர் இ.அருட்பிரகாசம் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

Share this Article
Leave a comment