ஹார்முஸ் நீரிணை வழியாக மலிவு விலையில் எண்ணெய் பெறும் நாடுகள், இனி அந்தப் பாதையின் பாதுகாப்பிற்குத் தாங்களே பொறுப்பேற்க வேண்டும் அவர்களுக்கு அமெரிக்கா தாராளமாக உதவும் என அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் அமெரிக்காவின் சுமையைக் குறைக்கும் வகையில் ட்ரம்ப் இந்த அதிரடி நிலைப்பாட்டை எடுத்துள்ளார்
சீனா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் ஹார்முஸ் நீரிணை வழியாக அதிகளவு எண்ணெயைப் பெறுகின்றன. எனவே, அந்தப் பாதையைப் பாதுகாக்கும் இராணுவச் செலவுகளையும், பொறுப்புகளையும் அந்த நாடுகளே ஏற்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கா இனி தனி ஆளாகப் பாதுகாக்காது, ஆனால் உதவி தேவைப்படும் நாடுகளுக்குத் தனது ஒத்துழைப்பை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஈரானின் அச்சுறுத்தல் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பாதுகாப்பிற்காக அமெரிக்கா தனது வரிப்பணத்தைச் செலவிடத் தயாராக இல்லை என்பதை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.