சனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே சனாதிபதி நோக்கமாகும் – அரசாங்க அதிபர்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ் மாவட்டத்திலிருந்து குறைந்த அளவான விண்ணப்ப படிவங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்து, சனாதிபதி நிதியத்தின் மூலம் பொதுமக்கள் நன்மையடைய வேண்டும் என்பதே அதிமேதகு சனாதிபதி அவர்களின் நோக்கமாகும் எனவும், இது தொடர்பில்கிராம அலுவலர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு களை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார் யாழ் அரசஅதிபர்.

சனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் நிதி உதவிகள் தொடர்பான தெளிவூட்டல் கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (25.02) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் ,

அத்துடன் அரசாங்க அதிபர்  அவர்கள் கிராம அலுவலர்கள் கடமைகளில் எதிர் நோக்குகின்ற சவால்கள் தொடர்பாகவும் அவர்களின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்.

சனாதிபதி நிதியத்தின் மூலம் நிதியுதவி பெற்றுக் கொள்ளக்கூடிய அறுவை சிகிச்சைகள் மற்றும் நிதியுதவியின் அளவு, மருத்துவ உதவி அல்லாத ஏனைய கோரிக்கைகள், மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எதிர்பாராத அனர்த்த நிலைமைகளுக்கு ஆளாகும் மீனவர்களின் குடும்பங்களின் கல்வி கற்கும் பிள்ளைகளுக்கான கல்விக்கான உதவிகள், வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் வெளிநாடுகளில் ஏதேனும் எதிர்பாராத அனர்த்தங்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் அவர்களின் குடும்பங்களின் இந்த நாட்டில் கல்வி கற்கும் பிள்ளைகளுக்காக  கல்வி உதவி வழங்குதல் போன்றவற்றுக்கான அறிவுறுத்தல்கள்  தொடர்பாக கிராம அலுவலர்களுக்கு தெளிவூட்டல் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் கே சிவகரன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) பா. ஜெயகரன், மாவட்ட செயலக பிரதம காணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.  தர்ஷினி, நிர்வாக உத்தியோகத்தர் கி. பொ. தனபாலா, பிரதேச செயலாளர்கள், யாழ்ப்பாண மாவட்ட கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Share this Article
Leave a comment