அக்குரேகொட இரட்டைக் கொலை; இரண்டாவது துப்பாக்கிதாரி கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அக்குரேகொட இரட்டைக் கொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இரண்டாவது துப்பாக்கிதாரியும் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் ஊவாக மாகாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த பெப்பரவரி 13ஆம் திகதி, தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர்.

இந்த இரட்டைக்கொலைச் சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் கடந்த சனிக்கிழமை (21/02) அம்பலங்கொடை பொலிஸ் பிரிவில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்த விசாரணைகளின் அடிப்படையில், மொணராகலை, ஹுலந்தாவ பிரதேசத்தில் வைத்து மற்றைய சந்தேகநபரை விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர்களை முக அடையாளம் காணும் முறைமையினூடாக அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை விசாரணை அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share this Article