இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களத்தில் தர ஜெயிலர், சார்ஜன்ட், கட்டுப்பாட்டாளர், தாதி மற்றும் மருந்தாளர் உள்ளிட்ட பல பதவிகளுக்காக ஒப்பந்த அடிப்படையில் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ள, 65 வயதிற்குட்பட்ட முன்னாள் சிறைச்சாலை அதிகாரிகளுக்கான பதவிகளை நிரப்பும் நோக்கில் இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான மேலதிக தகவல்களை www.prisons.gov.lk என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் அறிந்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.