வாகன இலக்கத் தகடுகள் அச்சிடல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணி சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார். 

அந்த வகையில் வாகன இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது சுமார் 4 இலட்சம் வாகன இலக்கத் தகடுகள் அச்சிடப்பட வேண்டிய நிலையில் நிலுவையில் உள்ளன.

இந்த புதிய உற்பத்தி நடவடிக்கைகள் சர்வதேச தரத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னைய ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டதை அடுத்து இலக்கத் தகடுகளை அச்சிடும் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

Share this Article