நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் கடந்த டிசம்பர் 03 அன்று இலங்கை கடற்படை கப்பல் வசப பிரிவால் நெடுந்தீவுக்கு தெற்கே உள்ள கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் பகுதியில் கைவிடப்பட்டிருந்த 09 சந்தேகத்திற்கிடமான பைகள் பரிசோதிக்கப்பட்டு அதிலே சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வர முயன்ற சுமார் ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பன கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட ஒரு இலட்சத்து அறுபதாயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள், 150 அழகுசாதன கிரீம்கள், லோஷன்கள் மற்றும் 10 கைக்கடிகாரங்கள் என்பவற்றுடன் , வெல்லைப்பகுதியில் கைப்பற்றப்பட்ட ஒரு தொகுதி கஞ்சாவும் இன்றையதினம் (15/12) நெடுந்தீவு பொலிஸாரால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.