காரைநகர் பிரதேச செயலாளரை நேரில் சந்தித்த ஸ்ரீபவானந்தராஜா பா.உ. !

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

காரைநகர் பிரதேச செயலாளரை  நேரில் சந்தித்து, காரைநகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளைப் பாராளுமன்ற உறுப்பினரான ஸ்ரீபவானந்தராஜா அவர்கள் ஆராய்ந்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பெற வேண்டிய நிவாரண உதவிகள் சரியான முறையில் வழங்கப்படுகிறதா, மேலும் அவர்களுக்கு இன்னும் தேவையான உதவிகள் உள்ளனவா என்பதை கேட்டறிந்து, தொடர்புடைய அதிகாரிகளுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு, காரைநகரில் உள்ள பிரதேசங்களிற்கு விஜயம் செய்து, அங்கு நிலவும் குறைப்பாடுகள் குறித்து மக்களிடம் நேரடியாக விளக்கம் பெற்றார். எதிர்காலத்தில் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை எவ்வாறு தடுக்கலாம் என்பதற்கான ஆலோசனைகள் ஆய்வ செய்யப்பட்டன.

Share this Article