06 ஆம் தரத்திற்கு அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் 12 வரை நீடிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் மீள் பரிசீலனைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 06 ஆம் தரத்திற்கு மாணவர்களை அனுமதிப்பதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது.

ஒன்லைன் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் முறை டிசம்பர் 05 ஆம் திகதிக்குப் பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் அனர்த்த நிலைமை காரணமாக டிசம்பர் 12 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தரம் 06இற்கான முதல் சுற்று சேர்க்கை ஜனவரி 2026 இல் நடைபெறுமெனவும் இந்த சேர்க்கைகள் முடிந்த பின்னரே மீதமுள்ள வெற்றிடங்களை நிரப்ப விண்ணப்பங்களைக்கோரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் அறிவித்துள்ளது.

Share this Article