ஐயப்ப யாத்திரை புனித யாத்திரையாக அறிவிப்பு – இலங்கைக்கு பெருமை

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் நேற்று (நவம்பர் 13) அரசாங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்பின் வேண்டுகோளின் பேரில், புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி ஆலோசனை மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களின் பரிந்துரைக்கமைய, அமைச்சரவை ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினருக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாகும். இதன் மூலம், ஐயப்ப யாத்திரையை புனித யாத்திரையாக பிரகடனப்படுத்திய ஒரே நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றுள்ளது.

Share this Article