ஒரே நாளில் லைசன்ஸ் புதுப்பிக்க முடியும். என்பதுடன் சில புதிய கட்டுப்பாடுகள் வந்துள்ளதுடன் , முன்பதிவு இன்றி முன்பு போல அன்றே சென்று, அன்றே புதுப்பிக்க முடியாது.
🔹 புதிய முறையை பின்பற்றினால் மட்டும் அதே நாளில் வேலை முடிக்க முடியும்
🔹 மருத்துவ சான்றிதழ் கையில் வழங்கப்படாது.
✅ படி 1:
DMT Website-இல் சென்று உங்கள் அனுமதிப்பத்திரத்தை புதுப்பிக்க உகந்த தேதியை முன்பதிவு செய்யுங்கள்.
(சேவை கட்டணம் இல்லை)
✅ படி 2:
அதே தேதிக்கே eChannelling Website-இல் சென்று மருத்துவ சான்றிதழ் appointment ஒன்றை Rs.114-ஐ செலுத்தி book செய்யுங்கள்.
✅ படி 3:
அன்று Medical centre சென்று Rs.1500 செலுத்தி சான்றிதழ் பெற்றுக்கொள்ளுங்கள். கையில் certificate வழங்கப்படாது SMS ஊடாகவே வழங்கப்படும்.
(Booking இல்லாமல் சான்றிதழ் வழங்கப்படாது)
📩 SMS மூலம் Ref No வரும் – இதையே Renewal இடத்தில் காட்டினால் போதும்!
நீங்கள் DMD Website இல் Book செய்த திகதியில் Renewal செய்து கொண்டு அதே நாளில் பெற்றுக் கொள்ள முடியும்.
குறிப்பு: உங்களுடைய licence Expiry ஆகுவதற்கு ஒரு மாதத்திற்கு முதலே booking செய்வதன் ஊடாகவே தாமதம் இன்றி உரிய திகதியில் பெறக்கூடியதாக இருக்கும்.
இந்த வழிமுறையை பின்பற்றினால், ஒரு நாளில் உங்கள் Driving License புதுப்பிக்க முடியும்!
Renewal செய்ய Bokking செய்ய இந்த Linkயை பயண்படுத்தவும்.
https://www.echannelling.com/driving-license-medical