வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலை வழக்கில் மேலும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
காலி பகுதியில் வெலிகம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இவர், காலி ஹியாரே பகுதியைச் சேர்ந்த முச்சக்கர வண்டி சாரதி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு இடம்பெறுவதற்கு முன்தினம், குற்றச்சாட்டுக்குட்பட்ட நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுடன் சேர்ந்து காலி மற்றும் மாத்தறை பகுதிகளுக்குச் சென்றதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் குறித்த நபருக்கு ரூ. 20,000 வழங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து, லசந்த விக்ரமசேகரவின் கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் பூதவுடலுக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (ஒக். 26) இறுதி அஞ்சலி செலுத்தியதுடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ஆதரவு தெரிவித்தார்.
