நாடாளுமன்றத்தில் சிறப்பு பாதுகாப்பு ஆய்வு – சபாநாயகர் உத்தரவு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நாடாளுமன்றம் சிறப்பு பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படவுள்ளதாகசபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று (ஒக்.23) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, அடுத்த மாதம் 4, 6 மற்றும் 7 ஆகிய மூன்று நாட்களில் இந்தஆய்வு மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

உறுப்பினர்களின் ஓய்வறைகள் மற்றும் அலுமாரிகள் உட்பட முழு நாடாளுமன்றகட்டடமும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என சபாநாயகர்குறிப்பிட்டுள்ளார்.

நவம்பர் மாதம் 7ஆம் திகதி நாடாளுமன்ற கட்டடத்தின் உயர் பாதுகாப்புபகுதிகளும் பாதுகாப்பு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அன்றையதினம்விருந்தினர்களுக்கு மட்டுமே பொது கேலரி அனுமதிக்கப்படும் என சபாநாயகர்கூறினார்.

விருந்தினர்களுக்கான அழைப்பிதழ்கள் நிதி அமைச்சினால் வழங்கப்படும். மேலும் சிறப்பு பாதுகாப்பு திட்டம் அமுலில் இருக்கும் வெள்ளிக்கிழமைநாடாளுமன்றத்திற்கு வாகனங்களில் வருகை தரும் போது நாடாளுமன்றஉறுப்பினர்கள் சாரதியுடன் வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அன்று நாடாளுமன்ற வாகன நிறுத்துமிடம் மூடப்படும் என்பதால், நாடாளுமன்றஉறுப்பினர்கள் வரும் வாகனங்கள் வாகன நிறுத்துமிடத்திற்கு அனுப்பப்படும்என சபாநாயகர் தெரிவித்தார்.அன்றைய தினம் சிறப்பு போக்குவரத்துத்திட்டமும் செயல்படுத்தப்படும் என்று சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share this Article