யாழில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் இருவர் கைது,வாள் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணத்தில் 20 கிராம் ‘ஐஸ்‘ ரக போதைப் பொருளுடன் இருவர் யாழ்மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர்ஒருவரின் மகன் எனத் தெரிய வந்துள்ளது.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவின் கீழ் இயங்கும் பொலிஸ்புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், குற்றத்தடுப்புப் பிரிவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே குறித்தஇருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 25 மற்றும் 23 வயதுடைய இளைஞர்கள் ஆவர் அதில் ஒருவர் வன்முறைக் கும்பல்களுடன் தொடர்புடையவர் எனவும், அவரிடமிருந்துஅபாயகரமான வாள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார்தெரிவித்தனர்.

கைதான இவர்கள் குற்றத்தடுப்புப் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுத்துச்சம்பவத்தில் இருந்து தப்பிக்கவும் முயற்சி மேற்கொண்டதாகத் தகவல்வெளியாகியுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப்பிரிவினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.

சமீப நாட்களாக யாழ்ப்பாணத்தில் ஐஸ் போதைப்பொருள் தொடர்பானகுற்றங்களுடன் தொடர்புடைய 6 பேர் கடந்த சில தினங்களுக்குள் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுகுறிப்பிடத்தக்கது.

Share this Article