வெலிகம பிரதேச சபை தலைவர் மிதிகம லசா துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

வெலிகம பிரதேச சபையின் தலைவர் ‘மிதிகம லசா’ என அழைக்கப்படும் லசந்த விக்ரமசேகர இன்று (ஒக். 22) உயிரிழந்துள்ளார்.

இன்று காலை அவர் பிரதேச சபை அலுவலகத்தில் தலைவரின் நாற்காலியில் அமர்ந்திருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் கடுமையாகக் காயமடைந்த அவரை பிரதேச சபை அதிகாரிகள் உடனடியாக மாத்தறை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.

மேலும், கையொப்பம் பெறுவதற்காக கடிதம் ஒன்றுடன் பிரதேச சபை தலைவரை அணுகியதாக நடித்தே துப்பாக்கிதாரிகள் அலுவலகத்துக்குள் நுழைந்து இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Article