யாழ். கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்களை நடுகை செய்ய தீர்மானம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி தொல்பொருட் திணைக்களம், யாழ். மாநகரசபை மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபை ஆகியன இணைந்து எஞ்சியஎல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது எனதீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டையைச் சுற்றி எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணிதொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்அவர்கள் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று (ஒக்.21) நடைபெற்றது.

தொல்பொருட் திணைக்களத்தால் எல்லைக் கற்கள் நடுகை செய்யும் பணிஆரம்பிக்கப்பட்ட நிலையில் எதிர்ப்புகள் காரணமாக அது நிறுத்தப்பட்டிருந்தது. இது தொடர்பில் இன்றைய கலந்துரையாடலில் ஆராயப்பட்டே மீள எஞ்சியஎல்லைக் கற்களை நடுகை செய்யும் பணிகளை முன்னெடுப்பது எனதீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், யாழ். மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் – காணி, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின்பொறியியலாளர்கள், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மாகாணப்பணிப்பாளர், யாழ். மாநகர சபையின் பொறியியலாளர், தொல்பொருட்திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

Share this Article