யாழ் போதனா வைத்தியசாலைக்குள் இந்திய இராணுவ அராஜகம் 38 ஆண்டுகள் இன்றுடன்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

1987 ஒக்ரோபர் 21 திகதி யாழ் போதனா வைத்தியசாலைக்குள் புகுந்த இந்தியஇராணுவத்தினர் சரமாரியாகச் சுட்டதில் நோயாளிகள், தாதிகள், மருத்துவர்கள், பணியாளர்கள் உட்பட பலர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

1987 ஒக்டோபர் 21, ஈழத் தமிழ் மக்களின் படுகொலை வரலாற்றில் மறக்கமுடியாத ஒருநாள். இந்தியப் படைகள் யாழ் மருத்துவமனையில் படுகொலைபுரிந்த ஈழத்தமிழர்களால் மறக்கமுடியாத நாள். இந்திய அமைதிப் படைகள்மேற்கொண்ட படுகொலைகளில் ஒன்றான யாழ் போதனா வைத்தியசாலைப்படுகொலைகள் இடம்பெற்ற நாள் இன்றாகும்.

யாழ்.கோட்டையிலிருந்து புறப்பட்ட இந்திய இராணுவம் நேரடியாகயாழ்.போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்தது. முதற்கட்டமாக மருத்துவவிடுதிக்குள் நுழைந்த படைகள் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுத்துக்கிடந்தநோயாளர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுக்கொன்றது. எஞ்சிக் கிடந்துகெஞ்சியோர் மீதும் யன்னல்களுக்குள்ளால் கைக்குண்டுகளை வீசிக்கொன்றனர்.

 

இதேவேளை தாம் மருத்துவர்கள், தாம் தாதியர் என பதவிக்குரியஆடைகளையும், ஆவணங்களையும், உபகரணகளையும் இராணுவத்துக்குக்காண்பித்தபடியே மக்களைக் காப்பாற்ற மருத்துவ விடுதிக்குள் நுழைந்தமருத்துவர்களைக் கூட இந்திய அமைதிப்படை விட்டுவைக்கவில்லை இவ்வாறு 21 பணியாளர்களை சுட்டுக்கொன்றது.

மருத்துவமனைக்கு உயிர்காக்க சென்றவர்கள், உயிருடன் திரும்பிவருவார்கள்எனக் காத்திருந்தவர்களுக்கு அவர்தம் இறுதி அஸ்தியைக்கூட கொடுக்கமுடியாதளவுக்கு அட்டூழியம் புரிந்து விட்டு யாழ்.போதனா வைத்தியசாலையைவிட்டு வெளியேறின இந்தியப் படைகள்.

வைத்தியசாலைகளை போர்த் தவிர்ப்பு வலயமாக மதிக்க வேண்டிய போர்தர்மத்தை ஈழத்தில் மீறியவர்களே இந்திய படையினர் ஈழத்தமிழ்இனப்படுகொலை விடயத்தில் இந்தியா சிறிலங்காவை ஊக்குவித்தது. அதைப்போலவே வைத்தியசாலைகள்மீது தாக்குதலை நடத்தும் விடயத்திலும்இந்தியாவே சிறிலங்கா படைகளுக்கு முன்னோடி என்பதை இவை உணர்த்திச் செல்கின்றமை ஆய்வாளர்களது கருத்தாகவுள்ளது.

Share this Article