மோட்டார் போக்குவரத்துதிணைக்கள இணையவழி சேவைகள் நாளை (ஒக்.21) முதல் வழமைக்குத் திருப்பவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே வாகன வருமான வரி பத்திரங்களை (TAX) நாளை முதல் பெற்றுக்கொள்ளமுடியும்.

2025 ஒக்.10 அன்று எதிர்பாராத தொழில்நுட்பகோளாறு காரணமாக தடைப்பட்டசேவைகள் தற்போ்து சீர்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 10.10.2025 ஆம் திகதிக்கு பின்னர் முடிவடைந்த வாகன வருமானவரிக்கு (TAX) மட்டுமே தண்டம் மற்றும் போக்குவரத்து பொலிஸாரின்சோதனையின் போது விலக்களிப்பினை எதிர்பார்க்க முடியுமென ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.