தரம் 1 தரம் 6 மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

அடுத்த வருடத்திற்கு தரம் 01 மற்றும் தரம் 06 மாணவர்களுக்கான பாடப்புத்தகங்கள் வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்தது.

புதிய கல்வி சீர்திருத்தங்களின் பிரகாரம் இந்த மாணவர்களுக்கு செயன்முறைபுத்தகங்கள் மற்றும் வழிகாட்டல் புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாககல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இவற்றை அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்ததரங்களுக்கான மாணவர்களின் புத்தகப்பைகளின் நிறை குறைவடையும்எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Share this Article