சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் கிடந்த சடலம் அடையாளம் காணப்பட்டது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பூநகரி – சங்குப்பிட்டி பாலம் அருகே கடலில் பெண்ணின் சடலம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஒக்.12) மீட்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது.

இந்நிலையில் இவ்வாறு சங்குப்பிட்டியில் சடலமாக மீட்கப்பட்டவர் வேலணை பகுதியைச் சேர்ந்த காரைநகரில் திருமணமாகி அங்கு வசித்துவரும் 2 பிள்ளைகளின் தாயாவார்.

குறித்த பெண் கடந்த சனிக்கிழமை (ஒக்.11) வவுனியாவில்  உள்ள தோழியின் வீட்டுக்கு சென்று வருவதாக வீட்டில் கூறிச் சென்றதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நேற்று (ஒக்.12) கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற பதில் நீதவான்எஸ்.சிவபாலசுப்பிரமணியம் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு சடலத்தைமீட்க உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொதுவைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்  உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னரே இறப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகும்  என்று கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பில் பூநகரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Share this Article